The Indian Times

கரிகால சோழன் வெறித்தனமாக ஆட்டம் போட்ட சோழா சோழா பாடல் VIDEO வெளியாகியது

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்தினம். இவர் இயக்கத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழில் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.இவரின் நீண்ட நாள் கனவு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க வேண்டும் என்பதே,அதற்கான சரியான நேரம் காத்திருந்து கதையின் உரிமையை வாங்கினார்.பின்னர் படத்தினை எடுக்க துவங்கி விட்டார்.இப்படத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி,கார்த்தி, விக்ரம்,பிரபு, சரத்குமார்,பார்த்திபன்,ஜெயராம், ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்புகளுக்குள் மத்தியில் உருவாகிய இப்படம் கடந்த மாதம் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.ரசிகர்கள் ஆர்வமாக படத்தினை கண்டு வருகின்றனர்

Advertisement

தற்போது இப்படத்தில் ஆதித்த கரிகாலன் போர் சென்று வென்று ஆட்டம் போட்ட சோழா சோழா பாடல் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.இப்படத்தின் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது,வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இசை மற்றும் விக்ரம் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Embed video credits : Tips Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in