The Indian Times

பிக்பாஸ் ஒரு Fake நிகழ்ச்சி.. சம்பளமே தர மாட்டாங்க… புலம்பும் நடிகை கஸ்தூரி சொன்ன அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3ல் கலந்து கொண்ட பிரபலங்களில் ஒருவர்தான் நடிகை கஸ்தூரி. இவர் பிக்பாஸை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் கமலஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார். டிவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்து அதன் மூலம் கிடைத்த புகழ்ச்சியை வைத்து பிக்பாஸ் சீசன் 3ல் Wild Card என்ட்ரியாக உள்ளே நுழைந்தார். ஆனால் இவரால் பெரிய கன்டென்ட் எதும் கிடைக்கவில்லை. அதனால் உள்ளே வந்த சில வாரங்களிலேயே வெளியே அனுப்பபட்டார். இவர் உள்ளே இருந்த போது இவருக்கும் வனிதாவிற்கும் ஏழாம் பொருத்தமாகதான் இருக்கும்.

Advertisement

ஒருமுறை ஒரு டாஸ்க்கில் வனிதாவை வாத்து என்று கூறி வனிதாவிடம் படாத பாடுபட்டார். அது போல் பேசத் தெரியாமல் அவ்வபோது பேசி இணைய நெட்டிசன்களிடமும் காலாய் வாங்குவார். இப்போது 24 மணி நேரமும் ஒளிபரப்பு ஆகும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதில் முதல் 5 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மீண்டும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு மொத்தம் 14 பேருடன் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. தற்போது இதில் Wild Card என்ட்ரியாக ஓவியா உள்ளே செல்ல உள்ளார் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Advertisement

 

இதற்கிடையில் டிவிட்டரில் ஒருவர் கஸ்தூரியை பிக்பாஸ் அல்டிமேட்டிற்கு போகுமாறு கூறியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி, எனக்கு அதை விட முக்கியமான பல வேலைகள், குடும்பம் இருக்கிறது, அதே போல சம்பளமே தராத Fake நிகழ்ச்சிக்குப் பின்னால் என்னால் ஓடிக் கொண்டிருக்க முடியாது என்று பதிலளித்துள்ளார். அதே போல் இன்னொருவர் இந்த ஞானம் ஏன் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்ளும் முன் இல்லை என கேட்க அதற்கு செத்தாதான் சுடுகாடு தெரியும் என பதிலளித்துள்ளார். Watch the Below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in