The Indian Times

காதல் மயக்கத்தில் TEA-ல் சர்க்கரைக்கு பதில் மாற்றி PEPPER போட்டு குடித்த அமீர்…  கலாய்த்து தள்ளிய பாவனி

சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவரை தற்போது காதலித்து வருவதாக கூறும் அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி மக்களின் வரவேற்பினை பெற்றார்.இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர் தான் பாவானி.இந்த நிகழ்ச்சியில் பாவனி மீது அமீருக்கு காதல் வரவே அதை பாவனியிடம் கூறியுள்ளார்.தற்போது பாவனி தனது காதலையும் அமீரிடம் கூறியுள்ளார்.விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளனர்.மேலும் இருவரும் அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

தற்போது அமீரும் பாவனியும் மலேசியாவில் சக பிக் பாஸ் போட்டியாளரான நடியா சங் வீட்டில் உள்ளனர்.அங்கு அனைவரும் குடும்பத்துடன் இணைந்து ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.அங்கு அமீர் டீயில் சுகருக்கு தவறுதலாக மிளகு தூள்  போட்டுள்ளார். இதனை பார்த்த பாவனி உனக்கு இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா என கூறி கலாய்த்து வருகின்றனர்.இந்த வீடியோவை நாடியா அவரது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது

Embed video credits : Nadia chang official

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in