The Indian Times

கல்யாணத்திற்காக காத்திருக்கும் வெண்பா.. DNA TEST முடிவுக்காக காத்திருக்கும் பாரதி… கல்யாணம் நடக்குமா? பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்று பாரதிகண்ணம்மா.இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல வருடங்களாக இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. வித்தியாசமான கதை அமைப்பினால் வழக்கம் போல குடும்ப தலைவிகளை கவர்ந்துள்ளார் இயக்குனர் என்று தான் கூற வேண்டும்.அந்தளவிற்கு ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.அது என்னவென்றால் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம்.இதனை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.காரணம் தொடரின் இறுதிப்பகுதி பாரதிக்கும் வெண்பாவுக்கும் திருமணம் நடக்கும் அதில் ஏற்படும் நிகழ்வுகள் தான் கிளைமாக்ஸ் காட்சிகள் என்பது தற்போது நாடகம் நகருவதை கொண்டு கணிக்க முடிகிறது

தற்போது புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோவில் பாரதிக்கும் வெண்பாவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.வெண்பா திருமணத்தினை நினைத்து மகிழ்ச்சியில் இருக்க பாரதி டி என் ஏ ரிசல்ட் காக காத்துக்கொண்டிருக்கிறார்.இறுதியாக என்ன நடக்க போகிறது என்பது மிகவும் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் கிளப்பியுள்ளது.

Embed video credits : Vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in