The Indian Times

வெறித்தனமாக LEO படத்திற்கு இசையமைக்கும் அனிருத்… முழு தளபதி வெறியனாக மாறிய அனிருத்

நடிகர் அனிருத் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர்.தற்போது ஹிந்தியிலும் இசைக்க தொடங்கி விட்டார்.இவரது இசைக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ரசிகர்களை கவரும் வித்தையை கைவசம் அனிருத் வைத்துள்ளதால் அவரது பாடல்கள் மாபெரும் ஹிட் அடித்து வருகிறது.3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்குள் கால் வைத்தவர்.முதல் படத்திலேயே இவர் இசையில் உருவாகிய ஒய் திஸ் கொலவெறி பாடல் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் ஹிட் அடித்தது.பல மொழிகளிலும் அந்த பாடலை மொழிபெயர்க்க தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.அந்த அளவிற்கு முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளர்.இவர் இசை இல்லாமல் தற்போது படங்கள் வெளியாவதே இல்லை அந்தளவிற்கு இசையால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் அனிருத் என்று தான் கூற வேண்டும்.இவருக்கு அடுத்ததாக ஜெயிலர்,அஜித் 62,லியோ ,இந்தியன் 2 போன்ற பெரிய படங்கள் வெளியாக உள்ளது.இப்படத்தின் பாடல்களை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.தற்போது இவர் இசையமைத்த ஆங்கில பாடல் ஒன்று லியோ படத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Advertisement

இப்பாடல் உருவான விதத்தினை வீடியோவாக எடுத்து அனிருத் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் முழு தளபதி வெறியனாக மாறிய அனிருத் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அனிருத் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Embed video credits : ANIRUDH RAVICHANDAR

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in