டைட்டானிக் மொத்த வசூலையே அள்ளி வாரிய அவதார் 2.. அடேங்கப்பா டைட்டானிக் வசூலையே முறியடிச்சிட்டாங்களா

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த படம் அவதார்.இப்படத்திற்கு இன்று வரை பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அவதார் முதல் பாகத்திற்கு பிறகு இரண்டாவது பாகத்தினை எடுக்க இயக்குனர் ஜேம்ஸ் 2014 ஆம் ஆண்டு திட்டமிட்டார்.ஆனால் இறுதியாக 2018ல் தான் பட வேலைகளை தொடங்கினார்.இரண்டாம் பாகத்துடன் சேர்த்து 3ஆம் பாகத்தின் சில காட்சிகளையும் எடுத்துள்ளதாகவும்,பட்ஜெட் குறைவாகியுள்ள காரணத்தினால் 3ஆம் பாகத்தின் படப்பிடிப்பை நிறுத்திவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தற்போது சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகமான அவதார் – தி வாட்டர் ஆஃப் வே உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்

டைட்டானிக் மொத்த வசூலையே அள்ளி வாரிய அவதார் 2.. அடேங்கப்பா டைட்டானிக் வசூலையே முறியடிச்சிட்டாங்களா 1

விளம்பரம்

இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.ரசிகர்கள் தொடர்ந்து படத்தினை கண்டு களித்து வருகின்றனர்.பல திரையரங்குகள் தமிழகத்தில் ஹவுஸ்புல் காட்சிகளாக சென்று வருகிறது.படத்தில் விசுவல் காட்சிகள் நேரில் காண்பது போல அமைந்துள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இப்படம் சுமார் 250 மில்லியன் டாலர் செலவில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  பட்டு வேஷ்டி சட்டையில் மனைவியுடன் அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த அட்லீ

டைட்டானிக் மொத்த வசூலையே அள்ளி வாரிய அவதார் 2.. அடேங்கப்பா டைட்டானிக் வசூலையே முறியடிச்சிட்டாங்களா 2

விளம்பரம்

இப்படம் 160 மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் சுமார் 2.7 பில்லியன் வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்த வசூல் டைட்டானிக் படத்தின் வாழ்நாள் வசூலை மிஞ்சியதாகவும் உலகளவில் அதிக வசூல் செய்த படங்களில் 3வது இடத்தினையும் பிடித்துள்ளது.இருபின்னும் அவென்ஜர் எண்டு கேம் வசூலையும்,அவதார் முதல் படத்தின் வசூலையும் முந்த தவறியுள்ளது அவதார் 2.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.இதனால் இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு கேள்விக்குறியாகவே உள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment