The Indian Times

வடிவேலுவை தொடர்ந்து பிரபல நகைச்சுவை நடிகருக்கு RED CARD?… இவரா என ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

வைகைப்புயல் வடிவேலுவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,இவர் நடிப்பில் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியாகிய இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.அண்மையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடித்து வந்தார்,ஆனால் அங்கு படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் படப்பிடிப்பிற்கு செல்லாமல் இருந்தார்,இதனால் படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் சங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.அதன்படி வடிவேலுவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.

Advertisement

பின்னர் லைக்கா நிறுவனம் தலையீட்டால் சமரசம் பேசி வடிவேலு மீண்டும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரை போல பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும் ரெட் கார்டு வழங்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது,நடிகர் ரெடின் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்,இவரின் எதார்த்த பேச்சு மற்றும் நகைச்சுவைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் தற்போது லெக் பீஸ் எனும் படத்தில் நடிக்க பத்து நாட்கள் கால் சீட் வழங்கியுள்ளார்.

Advertisement

ஆனால் கால்சீட் வழங்கியது போல அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.வெறும் நான்கு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால் லெக் பீஸ் படத்தின் தயாரிப்பாளர் மணிகண்டன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால் ரெடின் கிங்ஸ்லிக்கு ரெட் கார்டு வழங்கப்படுமா என கேள்வி எழும்பியுள்ளது.இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை விரைவில் அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in