The Indian Times

தம்பி பிறந்தநாளுக்கு புது பைக் வாங்கி கொடுத்து SURPRISE செய்த அறந்தாங்கி நிஷா…

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நகைச்சுவையில் அசத்தி அறிமுகம் ஆகியவர் அறந்தாங்கி நிஷா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தன்னை தாழ்த்திக்கொண்டு பிறரை சிரிக்க வைப்பவர் இவர்.பலர் தன்னை கேலி செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அத்தனையும் நகைச்சுவையாக மாற்றி மக்களை சிரிக்க வைப்பவர்.நகைச்சுவை மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் நிஷா.மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார்.இப்படி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து அசத்தி வருகிறார் நிஷா.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்றும் கலக்கி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.பின்னர் பிபி ஜோடிகள் முதல் சீசனில் பாலாஜியுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் அசத்தினார்.இப்படி பல திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு சின்னத்திரை வெள்ளித்திரையை வலம் வருகிறார் நிஷா

இவர் தனது தம்பியின் பிறந்தநாளுக்காக அவருக்கே தெரியாமல் புதிய பைக் வாங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.இதனால் அக்காவின் பாசத்தை பார்த்து அவரது தம்பி கண் கலக்கியுள்ளார்.தம்பியின் பிறந்தநாளை அறந்தாங்கி நிஷா கேக் வெட்டி சூப்பராக கொண்டாடியுள்ளார்.இந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : Karuppuroja

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in