The Indian Times

ராதிகாவை தோற்கடிக்க பாக்யலக்ஷ்மியுடன் கைகோர்த்த பழனிசாமி… பாக்கியாவுக்கு கேக் செய்ய சொல்லிக்கொடுக்கும் பழனிச்சாமி … பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது பாக்கியா படிப்படியாக வளர்ந்து கேட்டரிங் ஒன்றை துவங்குகிறார்,ராதிகா நிறுவனத்திடம் கேட்டரிங் ஆர்டர் வாங்கி வேலை செய்து வரும் பாக்கியலட்சுமி.அங்கு வரும் ராதிகா இனி சேலை உடுத்திக்கொண்டு யாரும் வேலை செய்ய கூடாது அனைவரும் சுடிதாரில் வேலை செய்ய வேண்டும் என கூறுகிறார்.ஆனால் இப்படி கூறினால் பாக்கியா வரமாட்டார் என திட்டம் போட்ட ராதிகாவுக்கு,பாக்கியா சுடிதாரில் வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.

இந்த ப்ரோமோவில் ,ராதிகா பாக்யவிடம் வந்து இன்னும் 2 நாட்களில் எங்களுக்கு இனிப்பு பலகாரம் வேண்டும் என கேட்கவே,அதை செய்ய தெரியாமல் பாக்கியா சோர்ந்து வந்து நிற்கிறார்.அவர் சோகமாக இருப்பதை பார்த்த பழனிச்சாமி நம்ம தோற்று போய்விடுவோம் சொல்றவங்க முன்னாடி வாழ்ந்துகாட்டனும் பாக்கியா என கூறி அவருக்கு கேக் செய்ய சொல்லி கொடுக்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் பழனிசாமியை பாராட்டி வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in