The Indian Times

த ற் கொ லை செய்ய போகும் அர்ச்சனா.. காப்பாற்றுவாரா சந்தியா? ராஜா ராணி 2

நடிகை ஆல்யா மானசா சஞ்சீவ் நடிப்பில் வெளியாகிய ராஜா ராணி சீரியல் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த நாடகத்திற்கு உடனடியாக சேர்ந்த ரசிகர்கள் கூட்டம் போல எந்த நாடகத்திற்கு இதுவரை இவ்வளவு கூட்டம் சேர்ந்தது இல்லை.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் வெற்றியையும் தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது இயக்கி ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நாடகத்தில் ஆல்யாவும் சித்துவும் நடித்து வந்த நிலையில் ஆல்யா கர்ப்பமாகியதால் அவர் நாடகத்தினை விட்டு வெளியேறினார்.பின்னர் அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது சந்தியாவாக ஆஷாகௌடா நடித்து வருகிறார்.முதல் பாகத்தினை போலவே இரண்டாவது பாகத்திற்கும் மக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.அதிகளவு குடும்பத்தலைவிகளை இந்த நாடகம் கவர்ந்துள்ளது.தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் பட்டியலில் இந்த தொடரும் இணைந்துள்ளது.தற்போது நாடகம் விறுவிறுப்பாக சூடுபிடித்து வருகிறது.இதனால் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் இந்த தொடருக்கு கூடி வருகிறது.தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

பக்கத்து வீட்டு குழந்தையை கடத்தி சென்றதில் இருந்து அர்ச்சனா புலம்பிக்கொண்டே இருக்கிறார்,குழந்தையை காப்பாற்ற வேண்டும் என சந்தியாவிடம் கூறுகிறார் அர்ச்சனா,சந்தியாவால் காப்பாற்ற முடியவில்லை என தெரிந்ததும் என் வாழ்க்கை அவ்வளவுதான் என கூறி ரூமுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு த ற் கொ லை செய்ய முயல்கிறார் அர்ச்சனா.இது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் பக்கத்து வீட்டு குழந்தைக்காக அர்ச்சனா ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என சந்தேகத்தினையும் சந்தியாவுக்கு ஏற்படுத்தி உள்ளது.அர்ச்சனாவை யார் காப்பாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in