ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாலா படம்

கடந்த 21 ஆண்டுகளாக 9 படம் மட்டுமே இயக்கி உள்ளார் இயக்குனர் பாலா. இவர் இயக்கி வெளியான படங்களில் அதிக அளவில் வெற்றி பெற்ற படம் பிதாமகன். இவர் இயக்கிய அனைத்து படங்களிலும் பெரும்பாலும் இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா அல்லது ஜீ வி ப்ரகாஷ் போன்ற இசையமைப்பாளர் துணையோடு ம‌ட்டுமே இவர் படத்தை இயற்றுவார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பாலி நாட்டில் HONEYMOON-ஐ கொண்டாடும் நடிகை பிரியங்கா நல்காரி

ஆனால் தற்போது இவர் புது பாணியில் ஏ ஆர் ரஹ்மான் அவர்களை இவரது புது படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. அது வதந்தி என்று பலர் கூறினார்கள். ஆனால் அது உண்மை தான் என்று பாலாவே ஒப்பு கொண்டுள்ளார். இதுவே பாலா அவரது படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  உயிர்தோழி நடிகை சைத்ரா பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நட்சத்திரா

ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாலா படம் 1

ஏற்கனவே ஏ ஆர் ரஹ்மான் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடித்த சர்வம் தாளமயம் படத்தில் இசை அமைத்தார். இப்போது பாலா இயக்கி ஜீவி பிரகாஷ் நடிக்க உள்ள படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த விஷயத்தை பாலா படக்குழுவினர் அனைவரும் மறைக்க முயன்றாலும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால் அதை மறுக்க முடியாமல் ஒப்பு கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment