படப்பிடிப்பில் அருண்விஜய்க்கு பலத்த காயம்… சோகத்தில் ரசிகர்கள்

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்.தந்தையை போல பிரபல நடிகர் ஆக வேண்டும் என கனவுடன் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.பிரபல நடிகரின் மகன் என்பதால் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தது அர்ஜுன் விஜய்க்கு.இவர் 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு நுழைந்தார்.இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும் இவர் கடின உழைப்பு இவரது படங்களில் தெரியும்.

கட்டாயம் படிக்கவும்  திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்

படப்பிடிப்பில் அருண்விஜய்க்கு பலத்த காயம்... சோகத்தில் ரசிகர்கள் 1

விளம்பரம்

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏதுவாக இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டி இருந்தார்.இந்த படத்தில் அருண் விஜய்க்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தினை பிடித்தார்.அதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய யானை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் செட்டில் ஆகிய நாயகி சீரியல் ஹீரோயின் வித்யா பிரதீப்

படப்பிடிப்பில் அருண்விஜய்க்கு பலத்த காயம்... சோகத்தில் ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது இவருக்கு படப்பிடிப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இதனை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும் தான் சொந்த ஸ்டண்ட் செய்து அடிபட்டுள்ளதாக பெருமையாக கூறியுள்ளார்.புகைப்படத்தில் அருண் விஜய் கை கடுமையாக வீங்கியுள்ளது.ரசிகர்கள் பார்த்து சண்டை செய்யுங்கள் அண்ணா என அருண்விஜய்க்கு அறிவுரை கூறி வருகின்றனர். மேலும் டூப் இல்லாமல் இவரே நடித்ததற்கு ரசிகர்கள் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  செம்ம கியூட்டாக வெளிநாட்டில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்

படப்பிடிப்பில் அருண்விஜய்க்கு பலத்த காயம்... சோகத்தில் ரசிகர்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment