The Indian Times

முதல் முறையாக மகளின் முகத்தினை காண்பித்த நடிகர் ஆர்யா- சாயீஷா

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே..முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.

Advertisement

மக்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து மகிழ்விப்பதில் ஆர்யா ஒருபோதும் தவறியதில்லை.தற்போது ஆர்யா இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் உடன் இணைந்து கேப்டன் படத்தில் நடித்துள்ளார்.முன்னதாக இதே கூட்டணியில் உருவாகி வெளியாகிய டெடி படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன்.மிருதன்,டெடி ,டிக் டிக் என பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளார்.ஆனால் அண்மையில் வெளியாகிய கேப்டன் படம் இவருக்கு பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது.

Advertisement

இவர் நடிகை சயீஷாவை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளது.பெண் குழந்தை பிறந்து இதுவரை முகத்தினை மக்களுக்கு ஆர்யாவும் சயீஷாவ்வும் காண்பிக்கவில்லை,தற்போது ஆர்யா பிறந்தநாளை முன்னிட்டு தனது மகளை அறிமுகப்படுத்துவதாக புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.ஆர்யா மகள் அப்படியே அம்மா சயீஷா போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in