The Indian Times

முரட்டு ஆளாக ராகவா லாரன்ஸ்… மூளைக்காரனாக SJ சூர்யா மிரட்டும் ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர் வெளியாகியது

நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் குறும்படங்களை எடுத்து போட்டியாளராக தனது வாழ்க்கையை இயக்குனராக தொடங்கியவர் கார்த்திக் சுப்புராஜ்.இவர் முதன் முதலாக இயக்கிய படம் பீசா.இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.தனது முதல் படத்திலேயே முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் கார்த்திக் சுப்புராஜ்.இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய படம் ஜிகர்தண்டா .இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

2014 ஆம் ஆண்டு இப்படம் வெளியாகியது.இப்படத்தில் கதாநாயகனாக சித்தார்த் நடித்திருந்தார்,வில்லனாக பாபி சிம்ஹா நடித்திருந்தார்.இப்படம் இன்றுவரை ரசிகர்களிடம் சிறந்த படமாக விளங்குகிறது.இப்படத்திற்கு பிறகு பல வெற்றிப்படங்களை கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.தற்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகத்தினை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.அதன்படி இப்படத்தின் டீசர் ஒன்றை தற்போது கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

Advertisement

இப்படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து நடித்துள்ளனர்.ராகவா லாரன்ஸ் கெட்டப் டீசரில் மிரட்டியுள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இது முந்தய படத்தின் தொடர்ச்சியா அல்லது புது கதையா என்பது குறித்து இதுவரை இயக்குனர் எந்த தகவலையும் வெளியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது,டீசர் ரசிகர்களிடம் படத்தின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.

Embed video credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in