The Indian Times

முத்து அண்ணன் உங்கள ரொம்ப மிஸ் பண்ணுனோம்… ஜிபியை சந்தித்த குயின்சி மற்றும் ஷெரினா

தமிழகத்தில் தற்போது ஜிபி முத்துவை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகிவிட்டார் .டிக் டாக்கில் நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வந்தவர் ஜிபி முத்து, நாளடைவில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்றார் ஜிபி முத்து. தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பம்பர் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரியவாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டார் .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட பிறகு இவருக்கு வரவேற்பு மக்களிடம் இரட்டிப்பாகியது.இவரை டைட்டில் வின்னராக்க மக்களும் முடிவு செய்துவிட்டனர். மேலும் நூறு நாட்கள் ஜிபி முத்து நம்மளை மகிழ்விப்பார் என ஆவலாக இருந்தனர்.ஆனால் ஜிபி முத்து குடும்பத்தினை பிரிந்து இருக்க முடியாது என நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.

Advertisement

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இவருடன் கலந்துகொண்ட சகப்போட்டியாளர்கள் ஆன குயின்சி மற்றும் ஷெரினா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.அவர்கள் ஜிபி முத்துவின் குடும்பத்தினை நேரில் சந்தித்துள்ளனர்.இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் ஜிபி முத்து பதிவேற்றியுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in