The Indian Times

அடேங்கப்பா! மீண்டும் ரிலீஸ் ஆன பாபா படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா … அதன் சூப்பர் ஸ்டார் POWER

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ரஜினிகாந்த் .இவருக்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காரணம் இந்திய சினிமாவிற்கே இவர் சூப்பர் ஸ்டார் என்பதால்.இவர் பேச்சு,நடிப்பு,ஸ்டைல் என எல்லாவற்றையும் பிரித்து ரசித்து பார்க்கும் அளவிற்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை கூட்டியுள்ளார்.இவர் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாவதால் வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.

Advertisement

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது. தற்போது ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியாகிய பாபா படத்தினை மீண்டும் வெளியிட்டுள்ளனர்.படத்தில் புதிய காட்சிகளை சேர்த்து பல காட்சிகளை கட் செய்து வெளியிட்டுள்ளனர்.ரசிகர்கள் இப்படத்தினை மீண்டும் திரையரங்குகளில் கண்டு களித்து வருகின்றனர்.

Advertisement

தற்போதும் இப்படம் ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ளது.20ஆண்டுகளுக்கு பிறகு வெளியானாலும் அதன் மவுசு குறையாமல் உள்ளது என்று தான் கூறவேண்டும்,வரவேற்பு மட்டுமில்லாமல் வசூல் மழையையும் பொழிகிறது பாபா,இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் ரூ.80 லட்சத்திற்கும் மேல் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.ஒரு சில தியேட்டர்களில் வெளியாகியே இவ்வளவு என்றால் அப்போ அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகினால் பல கோடிகளையும் தொட்டுவிடும் போலயே என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in