The Indian Times

CHILLA CHILLA பாடலுக்கு மகளுடன் இணைந்து மரண ஆட்டம் போட்ட ஸ்ரீதர் மாஸ்டர்

நடன இயக்குனராக சினிமாவில் பணிபுரிபவர் ஸ்ரீதர்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என போன்ற மொழி படங்களில் உள்ள பாடல்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.தற்போது கதாநாயகனாகவும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீதர்.இவர் அனைத்து மொழி முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது இவர் சென்னையில் சொந்தமாக டேன்ஸ் ஸ்டூடியோ வைத்து மாணவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.இவரை போல இவரது மகள் அக்ஷதாவும் நடனத்தில் வெளுத்து வாங்கி வருகிறார்.மகள் நடனம் ஆடுவதை தெரிந்து கொண்ட ஸ்ரீதர் அவருடன் இணைந்து நடனம் நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு வருகிறார்.ஆரம்பத்தில் எதார்த்தமாக வீடியோ வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக வீடியோ வெளியிட ஆரம்பித்தனர்.இவர்களின் நடனம் இணையத்தில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.இவர்களது நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

அடிக்கடி மகளுடன் இணைந்து நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வரும் இவர் கடந்த சில நாட்களாகவே நடனம் ஆடி வீடியோ வெளியிடாமல் இருந்தார்.இது ரசிகர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது.இந்நிலையில் ரசிகர்களின் கவலையை போக்க தற்போது ஸ்ரீதர் மாஸ்டர் மகள் அக்ஷதா ஸ்ரீதர் உடன் தல அஜித்தின் சில்லா சில்லா பாடலுக்கு வெறித்தனமாக நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வீடியோவை ஷேர் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in