The Indian Times

அவசரபட்டு கோபியை கல்யாணம் பண்ணிகிட்டியே…. தவறை உணரும் ராதிகா.. | பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

தற்போது இனியாவும் தாத்தாவும் கோபி வீட்டில் தான் உள்ளனர்.இவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என ராதிகா சமையல் செய்து கொடுக்கவே அதனை சாப்பிட்டு கோபி ராதிகாவை பாராட்டாமல் எந்த கடாயில் வாங்குனாய் என கேட்டு அசிங்கப்படுத்தியுள்ளார்.உடனே தாத்தா ராதிகாவிடம் வீட்டில் மனைவி விதவிதமா சமைச்சு கொடுப்பா அதையே நல்லா இருக்குனு சொல்லமாட்டான்,நீ கொடுத்ததை மட்டும் சொல்லிடுவானா அவசரப்பட்டு இவனை கல்யாணம் பண்ணிட்டே என கூறியுள்ளார்,தற்போது தாத்தா கூறுவது சரியாக இருக்குமோ என்று ராதிகா யோசித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=JdzVjFK8TN0&feature=youtu.be&ab_channel=VijayTelevision

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in