The Indian Times

முத்தம் கொடுக்க வந்த கோபியை கீழே தள்ளிவிட்ட ராதிகா…. | baakyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பெரும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.பிற சேனல்களை போல தரமான தொடர்களை ஒளிபரப்பி டிஆர்பியில் அடித்து துவம்சம் செய்து வருகிறது விஜய் டிவி.இந்த சேனலில் பல நாடகங்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் பாக்கியலட்சுமி நாடகத்திற்கு தனி மவுசு உள்ளது ரசிகர்களிடம் . குறிப்பாக பல குடும்பத்தலைவிகளை வெகுவாக கவர்ந்துள்ளது இந்த தொடர் என்று தான் சொல்ல வேண்டும் .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாக்கியலட்சுமி தொடரின் கதாநாயகி கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.பாக்கியாவை ஏமாற்றிவிட்டுஅவரது கணவர் கோபி ராதிகா என்ற தான் கல்லூரியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்கிறார்.இதனால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்து வீட்டை விட்டு அனுப்பி குடும்பத்தினை இவரே பார்த்துக்கொள்கிறார்.இந்நிலையில் ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா வீட்டிற்கு எதிரேயே குடி வருகிறார்.மேலும் இனியாவை கோபி வீட்டிற்கு அழைத்து செல்லவே தாத்தாவும் அவருடன் செல்கிறார்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் கோபி வீட்டில் ஆள் இல்லை என ராதிகாவுக்கு முத்தம் கொடுக்க போகவே அந்த சமயம் இனியா அங்கு வரவே அதனை கண்ட கோபியை ராதிகா கீழே தள்ளி விட்டுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.கோபி கீழே விழுந்தது பல ரசிகர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in