The Indian Times

கோமதியின் அண்ணன் மகள் ராஜியை காப்பாற்றுவாரா பாக்கியா? பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தற்போது இந்த தொடரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் சங்கம் ஆகி ஒன்றாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இரு தொடர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தற்போது கோமதி அண்ணன் மகள் ராஜி காதலனுடன் ஓடி வந்து கோமதி இருக்கும் ஹோட்டலில் தங்கியுள்ளார். அங்கு தான் பாக்கியாவும் இருக்கிறார்.

Advertisement

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில், ராஜியின் காதலன் அவரை தொடர்ந்து மிரட்டி வருகிறார். அதனை பாக்கியா பார்த்துவிடுகிறார். இந்நிலையில் ராஜியை பாக்கியா காப்பற்றுவாரா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in