The Indian Times

என்ன பாக்கியா கார் ஓட்டுறாளா,அதிர்ந்து போன கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் கோபி இனியாவின் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்காக இனியாவை கேரளா அழைத்து செல்ல இருக்கிறார்,இதனால் அப்பாவுடன் டூர் செல்லும் மகிழ்ச்சியில் இனியா தயாராக இருக்கிறார்.மேலும் வீட்டில் உள்ளவர்களுடனும் அப்பாவுடன் டூர் செல்வதாக கூறி வருகிறார்,இறுதியாக கோபியால் வர முடியாமல் போகிறது தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் பாக்கியா இனியாவை அழைத்துக்கொண்டு காரில் செல்கிறார்

அப்பொழுது கோபி இனியாவை தொடர்பு கொண்டு பேசுகிறார், அப்பொழுது பாக்கியா தான் கார் ஓட்டுவதை கூறவே அதிர்ந்து போயுள்ளார் மேலும் உடனே இனியா கீழே இறங்கு என கூறியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நகைச்சுவையை ஏற்படுத்தி இருக்கிறது.

https://youtu.be/VuqXcodl3e8

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in