The Indian Times

பாட்டி எந்திரிங்க.. ஈஸ்வரியை தூங்கவிடாமல் முத்தம் கொடுத்து கொஞ்சிய நிலா பாப்பா… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இதுஒருபுறம் இருக்க எழில் அமிர்தாவை திருமணம் செய்துகொண்டு வந்ததால் ஈஸ்வரி பாட்டி செம்ம கடுப்பில் உள்ளார்.இந்நிலையில் ஈஸ்வரி அறையில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது அமிர்தா மகள் நிலா சென்று அவரை பாட்டி பாட்டி என அழைத்து எழுப்பி அவருக்கு முத்தமிடுகிறார்,ஈஸ்வரி அவரை வெளியே போ என கூறியும் குழந்தை நகராமல் ஈஸ்வரியை கொஞ்சியுள்ளது.இந்த வீடியோ பார்ப்பதற்கே அவ்வளவு இனிமையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=Xn8Vm_lzcf0

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in