The Indian Times

நீ பேசுறது எனக்கே காண்டாகுதுய்யா… நிகழ்ச்சியில் கடுப்பாகி இளைஞரை திட்டி தீர்த்த VIJAY TV கோபிநாத்… நீயா நானா PROMO

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருப்பவர் கோபிநாத்.இந்த நிகழ்ச்சி மூலம் பலரை வெகுவாக கவர்ந்தவர் இவர்.இந்த நிகழ்ச்சியில் சரியானது எதுவோ அதை மட்டும் இவர் பேசுவதால் இவரை பலருக்கும் பிடிக்கிறது.இவர் விஜய் தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பிரபல தனியார் வானொலியில் பணியாற்றி வருகிறார்.இவரின் பேச்சுக்கே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது விஜய்டிவியின் நட்சத்திர தொகுப்பாளராக உள்ளார் கோபிநாத்.இவர் விஜய் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியை முதல் முறையாக தொகுத்து வழங்கி சின்னத்திரைக்குள் நுழைந்தார் கோபி.அதேபோல் மேலும் சிகரம் தொட்ட மனிதர்கள்,நடந்தது என்ன என்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.இதில் இவருக்கு நீயா நானாவை விட நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்த நிகழ்ச்சி நடந்தது என்ன ஆகும்.அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகினார்.

தற்போது இவர் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது.இந்த வார நிகழ்ச்சியில் சினிமாவின் மேல் வெறிபிடித்த ரசிகர்களும்,அவர்கள் மேல் செம்ம கோவமாக உள்ள பொதுமக்களுக்கும் இடையே வாக்கு வாதம் நடைபெற்றுள்ளது.இதில் சினிமா ரசிகர் ஒருவர் திரையில் எங்களுக்கு பிடித்த ஹீரோ பெயர் வருவது முதல் குழந்தையை கையில் ஏந்துவது போல ஆனந்தமாக உள்ளது என கூறவே அப்படியெல்லாம் பேசாதீங்க எனக்கே காண்டாகுது என கோபிநாத் கடுமையாக கண்டித்துள்ளார்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in