The Indian Times

குக் வித் கோமாளி வேண்டாம்… இளநீர் கடையில் வேலைக்கு சேர்ந்த குரேஷி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உண்டு.இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த இரண்டு சீசன்கள் நிகழ்ச்சியை போலவே மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கி இருப்பவர் தான் குரேஷி.கலக்கப்போவது யாரு சீசன் 5ல் போட்டியாளராக அறிமுகமாகியவர் குரேஷி.தனது கடின உழைப்பினால் அந்த சீசனில் கடுமையாக போட்டியிட்டு டைட்டிலை தட்டி சென்றார்.கலக்கப்போவது யார் என்ற டைட்டிலை இவருக்கு வழங்கியதே சினிமாவில் கலக்கி வரும் சிவகார்த்திகேயன் தான்,இவரும் தனது வாழ்க்கையை இந்த டைட்டிலை வென்று தான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பிறகு குரேஷியின் திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.இந்த நிகழ்ச்சி மூலம் தற்போது இவர் மிக பிரபலம் ஆகி உள்ளார்.

தற்போது இவர் யூடியூப் சேனல் வைத்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.அதன்படி இவர் இளநீர் கடையில் வேலைக்கு சேர்ந்து அங்கு இளநீர் வெட்டி கொடுத்து இளநீர் வாங்க வருபவர்களையும் கலாய்த்து உள்ளார்.இதனை வீடியோவாக தனது யூடியூபில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீங்கள் தான் சிறந்த பொழுது போக்காளர்,உங்களது நகைச்சுவைக்கு சிரித்து முடியவில்லை என கூறி கருத்துக்களை வீடியோவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : KURAISHI VIBES

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in