The Indian Times

பாக்கியா கேட்டரிங் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்து ராதிகாவிடம் வசமாக சிக்கிய கோபி… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

தற்போது பாக்கியா படிப்படியாக வளர்ந்து கேட்டரிங் ஒன்றை துவங்குகிறார்,இந்த கேட்டரிங் கான்டிராக்டை ராதிகா நிறுவனத்திடம் இருந்துதான் வாங்குகிறார் பாக்கியா.இந்த கேட்டரிங் திறப்பு விழாவுக்கு இனியாவை விட கோபி வருகிறார்,அங்கு வரும் கோபி ஆச்சரியமாக கேட்டரிங்கை பார்த்து கொண்டிருக்கும் பொழுது ராதிகா பின்னாடியே வந்துள்ளார்,ராதிகாவை பார்த்த கோபி பயந்து நடுங்கி நான் இனியாவை விட வந்தேன் இப்போ கிளம்ப போகிறேன் என கூறுகிறார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு நேரமே சரி இல்லை கோபி என அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=CXq0f9nf2U8

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in