The Indian Times

ஸ்ருத்திகா போலவே செய்து காண்பித்து பங்கமாக கலாய்த்த ராதா ரவி….. KPY CHAMPIONS PROMO

விஜய் டிவிக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை மகிழ்விப்பதில் ஒருநாளும் தவறியதே இல்லை விஜய் தொலைக்காட்சி எனலாம்.பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளினால் தான் விஜய் தொலைக்காட்சி இயங்கி வருகிறது என்று கூறினால் மிகையாகாது.இந்த தொலைக்காட்சியில் அறிமுகமாகியவர்கள் தான் தற்போது வெள்ளித்திரையினை கலக்கி வருகிறார்கள்,அந்தளவிற்கு தன்னை நம்பி வந்தவர்களை உயர்த்தி விடுகிறது விஜய் தொலைக்காட்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.தற்போது விஜய் டிவி KPY சாம்பியன்ஸ் என்ற காமெடி நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது.இதுவரை விஜய் தொலைக்காட்சியில் வந்து பிரபலமடைந்த கலைஞர்கள் தங்களது நகைச்சுவை திறமையை இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிக்கொண்டு வந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராதா ரவி வருகை தந்துள்ளார் மேலும் ராதா ரவி நடுவராக இருக்கும் ஸ்ருதிகா போலவே செய்து அவரை கலாய்த்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ஸ்ருத்திகாவை கலாய்க்காதவர்கள் யார் தான் உள்ளார்கள் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.சிலர் ஸ்ருதிகா செய்வதை பார்த்தால் எரிச்சலாகிறது எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in