The Indian Times

மருமகள் ஜெனி வளைகாப்புக்கு ராதிகாவை கூட்டிட்டு ஜோடியாக வந்த கோபி…கோவத்தில் கொந்தளித்த பாக்கியா … பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

பாக்கியலட்சுமி மகன் செழியன் மனைவியின் வளைகாப்பு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சிக்கு கோபி ராதிகாவை கூட்டிக்கொண்டு ஜோடியாக வருகை தந்துள்ளார்.இவரை பார்த்த உடனே அனைவரும் செம்ம கோவத்தில் கொதித்துள்ளனர்.ராதிகா தயங்கி தயங்கி வரவே,நான் இருக்கேன்ல நீ வா ராதிகா என அவரை அழைத்து வருகிறார்.தற்போது வளைகாப்பு வீட்டில் என்ன கலவரம் நடக்க போகுதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.

https://www.youtube.com/watch?v=s6GU6P2Nwjw

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in