The Indian Times

வந்தாச்சு குக் வித் கோமாளி சீசன் 4.. வெளியாகிய அதிரடி PROMO… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தமிழில் மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்து நான்காவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர். கடந்த மூன்று சீசன்களுக்கு மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.கடந்த சீசனில் கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சி மீண்டும் எப்பொழுது தொடங்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் இந்த நிகழ்ச்சியை களம் இறக்கியுள்ளது.விஜய் தொலைக்காட்சி.இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் நிகழ்ச்சியின் மவுசும் அதிகரித்துள்ளது.தற்போது நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 4 ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்

ப்ரோமோவில் ஜிபி முத்து மற்றும் இணையத்தில் சமீபத்தில் பிரபலமாகிய ஓட்டேரி சிவா ஆகியோர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது.இதனால் இந்த முறை குக் வித் கோமாளி மாபெரும் ஹிட் அடிக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை,ரசிகர்களிடம் ப்ரோமோ நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,எப்பொழுது நிகழ்ச்சி தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in