ரவீனா,சைத்ரா எல்லாம் ஓரமா போ… ஸ்ரீதர் மாஸ்டர் உடன் தாறுமாறாக மரண ஆட்டம் போட்ட ஆல்யா மானசா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காலை வெட்டிடுவேன்.. AGS-ஐ கிழித்த நந்தினி... எதிர்நீச்சல் ப்ரோமோ

ரவீனா,சைத்ரா எல்லாம் ஓரமா போ... ஸ்ரீதர் மாஸ்டர் உடன் தாறுமாறாக மரண ஆட்டம் போட்ட ஆல்யா மானசா 1

விளம்பரம்

இவர்களுக்கு அழகிய பெண் மற்றும் ஆண் குழந்தைகள் என இரண்டு குழந்தைகள் உள்ளது.இதனால் சினிமா பக்கம் தலைகாட்டாமல் குழந்தைகளை வளர்த்து வருவதில் குறிக்கோளாக இருந்தார்.குடும்ப வாழ்க்கையை கவனித்து வந்த ஆல்யா தற்போது குழந்தைகள் வளர்ந்துள்ளதால் மீண்டும் நாடகங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார்.தற்போது இனியா என்கிற புதிய சீரியலில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவை அளித்து வருகின்றனர்.டி ஆர் பியிலும் நல்ல ரேட்டிங் பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நம்ம எப்போ First Meet பண்ணுனோம்... காதலுடன் பேசும் முத்து மற்றும் மீனா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ரவீனா,சைத்ரா எல்லாம் ஓரமா போ... ஸ்ரீதர் மாஸ்டர் உடன் தாறுமாறாக மரண ஆட்டம் போட்ட ஆல்யா மானசா 2

விளம்பரம்

தற்போது இவர் ஸ்ரீதர் மாஸ்டர் உடன் சேர்ந்து மரணகுத்தாட்டம் போட்டுள்ளார்.இதனை வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆல்யா மானசாவின் நடனத்தினை பெருமளவு பாராட்டி வருகின்றனர். வீடியோ ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மீனாவையும் ராஜியையும் கடத்தி மாட்டிக்கொண்ட குமரவேல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment