The Indian Times

கண்ணம்மா மீது அவதூறு பழி ஏற்படுத்திய செல்லப்பாண்டி… வெறியோடு பாண்டியை பார்க்க கிளம்பிய கண்ணம்மா… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடி வருகிறது.தற்போது கண்ணம்மா குழந்தைகள் தனது குழந்தைகள் என பாரதி டி என் ஏ ரிசல்ட் மூலம் தெரிந்துகொண்டு தன்னுடன் வாழ வரவேண்டும் என கண்ணம்மா காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.ஆனால் அவர் செய்ததை மறக்க முடியாமல் கண்ணம்மா அவரை மன்னிக்க மறுத்து விடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மா தனது அப்பா மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.அங்கு தன்னால் முடிந்த வேலைகளை பார்த்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.அதே சமயம் பாரதி கண்ணம்மாவை போல பையை தூக்கி கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அலைகிறார்.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.பாரதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பல குடும்ப தலைவிகளையும் இந்த நாடகம் வெகுவாக கவர்ந்து உள்ளது,இதற்கு காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கதையை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

தற்போது பாரதி கண்ணம்மாவின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் செல்லப்பாண்டி கண்ணம்மாவை பழி வாங்கி அவரது தொழிலை கெடுக்க நினைத்து அவதூறு பரப்புகிறார்.இதனால் கண்ணம்மா மேல் ஊருக்குள் கெட்டபெயர் விழுந்து விடுகிறது.தன் மேல் வீண் பழி சுமத்திய செல்லப்பாண்டியை பார்க்க கடும் கோபத்துடன் கிளம்பியுள்ளார் கண்ணம்மா

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in