The Indian Times

பாக்கியா தப்பானவள்… தாத்தா மற்றும் இனியாவிடம் தவறாக கூறிய கோபி… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

.தற்போது பிசினஸ் விஷயமாக பாக்கியா ஒருவரை நேரில் சந்தித்து பேசுகிறார்,அதனை பார்த்த கோபி பாக்கியா நல்லவ மாதிரி பேசுவா இப்போ இன்னோருத்தன் கூட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கா என தவறாக புரிந்து கொண்டுள்ளார்.மேலும் வீட்டிற்கு வந்து தந்தை மற்றும் மகளிடம் ,பாக்கியாவை இன்னைக்கு ஹோட்டலில் பார்த்தேன் அவர் இன்னோருத்தர் கூட பேசி சிரிச்சிட்டு இருக்காரு,என தவறாக கூறியுள்ளார்.இதனால் தாத்தா கோபி மேல் கடும் கோபத்தில் உள்ளார்.இதனை கேட்டு அவர் என்ன கூற போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

https://www.youtube.com/watch?v=8ZDGe5F3vDY

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in