The Indian Times

கணவருடன் சென்று புகழை சபரிமலைக்கு வழியனுப்பி வைத்த ரித்திகா.. இருமுடி கட்டி சபரிமலை கிளம்பிய புகழ்

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து பிரபலமாகியவர் நடிகை ரித்திகா.இவர் முதன் முதலாக ராஜா ராணி நாடகத்தின் முதல் சின்னத்திரையில் அறிமுகமாகியவர்.இந்த நாடகம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை.இருப்பினும் விடாமல் போராடிய இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை இவர் அடிக்கடி நிரூபித்து வருகிறார்.முதல் கட்டமாக நடிப்பு இரண்டாவது சமையல் மூன்றாவதாக நகைச்சுவை நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு பட்டையை கிளப்பினார்.தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.விஜய் டிவியில் வேலை செய்து வரும் வினு என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் ரித்திகா. இவர் கணவருடன் அடிக்கடி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்

இந்நிலையில் விஜய் டிவி புகழ் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார்.அவர் சபரிமலை புறப்படும் நேரம் என்பதால் ரித்திகா அவரது கணவருடன் சென்று புகழை மலைக்கு வழியனுப்பி வைத்துள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரித்திகா.வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in