The Indian Times

சிம்பு பாடிய மாயன் திரைப்படத்தின் Baby Song!

Watch the video below ஜே ராஜேஷ் கண்ணன் எழுதி இயக்கிய வரவிருக்கும் தமிழ் திரைப்படம் மாயன். ஃபாக்ஸ் & க்ரோ ஸ்டுடியோஸ் மற்றும் ஜிவிகேஎம் யானை தயாரிப்புகள் தயாரித்தவை.மாயன் தமிழ் திரைப்படத்தில் வினோத் மோகன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். அருண் பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார், ராஜீஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Advertisement

மேலும் இந்த படத்தில் பியா பாஜ்பாய் மற்றும் பிந்து மாதவியும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த டீசரை பார்க்கும்போதே ஒரு வித்தியாசமான உணர்வை அனைவர்க்கும் கொடுத்தது. இது ஒரு வரலாற்றுமிக்க திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. பேபி சாங் என்ற இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். இதை சிம்பு ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. Watch the video below

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in