The Indian Times

ராமராஜன் முன்னாடி அவரை போலவே நடனம் ஆடி அசத்திய அமுதவாணன்.. அமுதவாணன் திறமையை பாராட்டி தங்கமோதிரத்தை அளித்த ராமராஜன்

விஜய் தொலைக்காட்சி பல கலைஞர்களை உருவாக்கியுள்ளது.இன்று வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன்,சந்தானம் எல்லாம் விஜய் டிவியில் இருந்து உருவாகிய கிளைகள் தான்.விஜய் டிவி பலரின் திறமைகளை கண்டறிய பெரும் கருவியாக உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரிடமும் இருக்கும் திறமைகளை மக்களிடம் கொண்டு சென்று அவர்களை புகழின் உச்சியில் தூக்கி உட்கார வைக்கிறது.அந்தளவிற்கு பல திறமைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது விஜய் டிவி.பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை மகிழ்விக்கிறதில் பெரும் பங்கினை விஜய் தொலைக்காட்சி ஆற்றி வருகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பலரும் தற்போது சினிமாவில் பாடகராக உள்ளனர்.அதேபோல் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் வந்தவர்கள் எல்லாம் தற்போது சினிமாவை கலக்கி வருகிறார்கள் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.தற்போது விஜய் டிவி கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் காமெடி நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது.விஜய் தொலைக்காட்சியில் உள்ள பல நகைச்சுவை நட்சத்திரங்களும் இதில் கலந்துகொண்டு தங்களது நகைச்சுவை திறமையால் மக்களை வெகுவாக சிரிக்க வைக்கின்றனர்.நிகழ்ச்சியில் நடுவராக மதுரை முத்து,தாடி பாலாஜி,ஸ்ருதிகா மற்றும் ரேஷ்மா ஆகியோர் உள்ளனர்.

இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராமராஜன் வருகை தந்துள்ளார்.இவரது சினிமா வாழ்க்கையில் முதல் முதலாக டிவி நிகழ்ச்சிக்கு வருவது இதுதான் முதல்முறை என தெரிவித்துள்ளார்.அமுதவாணன் ராமராஜனை போலவே நடனமாடி அசத்துவார் என்பது தெரியும் தற்போது அவர் முன்னாலேயே அவரை போல நடனமாடி அசத்தியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in