பாரதி கண்ணம்மா சீரியலில் அதிரடியாக என்ட்ரி கொடுத்த பிக் பாஸ் தாமரை செல்வி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடி வருகிறது.தற்போது கண்ணம்மா குழந்தைகள் தனது குழந்தைகள் என பாரதி டி என் ஏ ரிசல்ட் மூலம் தெரிந்துகொண்டு தன்னுடன் வாழ வரவேண்டும் என கண்ணம்மா காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.ஆனால் அவர் செய்ததை மறக்க முடியாமல் கண்ணம்மா அவரை மன்னிக்க மறுத்து விடுகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

பாரதி கண்ணம்மா சீரியலில் அதிரடியாக என்ட்ரி கொடுத்த பிக் பாஸ் தாமரை செல்வி 1

விளம்பரம்

பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மா தனது அப்பா மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.அங்கு தன்னால் முடிந்த வேலைகளை பார்த்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.அதே சமயம் பாரதி கண்ணம்மாவை போல பையை தூக்கி கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அலைகிறார்.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.பாரதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பல குடும்ப தலைவிகளையும் இந்த நாடகம் வெகுவாக கவர்ந்து உள்ளது,இதற்கு காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கதையை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாகும் .

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பாரதி கண்ணம்மா சீரியலில் அதிரடியாக என்ட்ரி கொடுத்த பிக் பாஸ் தாமரை செல்வி 2

விளம்பரம்

இந்த நாடகத்தில் தற்போது பிக் பாஸ் தாமரை செல்வி களம் இறங்கியுள்ளார்.இந்த நாடகத்தின் மூலம் முதல் முறையாக வெள்ளித்திரையில் கால் தடம் பதித்துள்ளார் தாமரை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நீண்ட இடைவெளியில் இவருக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது,இதில் மும்முரமாக நடித்து வருகிறார்.அண்மையில் படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.தற்போது சீரியலிலும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் அதிலும் ஒப்புக்கொண்டு நடிக்க தொடங்கிவிட்டார் .இவர் சீரியலில் வந்த ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.ரசிகர்களிடம் ப்ரோமோ நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தாமரைக்கு தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment