The Indian Times

எங்களுக்கு END-யே கிடையாது… பாரதிகண்ணம்மா 2 PROMO-வை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் டிவி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது இந்த நாடகம் இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்துள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் ரசிகர்கள் மனதினை கொள்ளையடித்துள்ளது என்றே கூறலாம்,இருந்தாலும் சில ரசிகர்கள் தொடர் ரொம்ப இழுவையா இருக்கு சீக்கிரம் முடிங்க,எப்போ முடிப்பீங்க என கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தனர்,இந்நிலையில் இந்த தொடரின் முடிவு இவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது,இருந்தும் மகிழ்ச்சியை நீண்ட நேரம் அனுபவிக்க விடாமல் விஜய் தொலைக்காட்சி ஷாக் கொடுத்துள்ளது

அதன்படி இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்துள்ளது.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடிக்க உள்ளார்.கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடிக்க உள்ளார்.இந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்துள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in