The Indian Times

எழில் கல்யாணத்தில் மேடையில் பாக்கியாவுடன் ஜோடியாக நின்ற கோபி… செம்ம கடுப்பாகிய ராதிகா … பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.ஆனால் அதனை பற்றி துளியும் பாக்கியா கவலைப்படாமல் தனது வாழ்க்கையில் முன்னேறுவதை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் எழிலுக்கு வர்ஷினியுடன் கட்டாய கல்யாணம் நடந்து வருகிறது.பாக்கியாவுக்கும் எழிலுக்கும் கல்யாணத்தில் சிறிதளவு கூட சம்மதம் இல்லை,காரணம் எழில் அமிர்தாவை விரும்பி வருகிறார்.இந்த திருமணத்தில் கோபி மேடையில் பாக்கியவுடன் ஒன்றாக நிற்கவே அவரை பார்த்து ராதிகா கீழே இருந்து முறைத்துள்ளார்,உடனே கோபி மேடையில் இருந்து கீழே இறங்கி ராதிகா பக்கத்தில் அமர்ந்துவிடுகிறார்.பின்னர் என்னை ஏன் இங்கு கூட்டு வந்தீங்க என கோபியை கிழித்தெடுக்கிறார் ராதிகா,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

https://www.youtube.com/watch?v=KiQEkJQEf-I

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in