The Indian Times

காதலர் தின படத்தின் கதாநாயகி சோனாலியின் சமீபத்திய புகைப்படங்கள்

1994ஆம் ஆண்டு முதல் ஹிந்தி சினிமாவில் களம் இறங்கி நடித்து வரும் இவர் தமிழில் முதன் முதலாக அறிமுகமாகிய படம் காதலர் தினம்.இப்படத்திற்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு.தற்போதும் காதலர் தினத்தன்று இப்படத்தினை டிவி சேனல்கள் ஒளிபரப்பி கொண்டு வருகிறது.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்த சோனாலி தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தினையே திரட்டினார் என்று தான் சொல்ல வேண்டும்,அந்தளவுக்கு நடிப்பினால் அனைவரையும் கவர்ந்துள்ளார் சோனாலி.

Advertisement

இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் மீண்டும் ஹிந்தியில் களம் இறங்கினார்.

இவர் ஹிந்தியில் மட்டும் இல்லை தமிழ்,தெலுங்கு கன்னடா மற்றும் மராத்தியிலும் படங்கள் நடித்துள்ளார்.இவ்வாறு படங்கள் பிசியாக நடித்து வந்த சோனாலி 2018ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சைக்கு பிறகு பூரண குணமாகிய அவர் தற்போது படங்களில் நடிப்பதில் ஆவல் காட்டுவதில்லை

இந்நிலையில் 49வயதான அவர் தற்போது அழகில் கலக்குகிறார்,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சோனாலி.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் சோனாலியா இது அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in