The Indian Times

சச்சின் சார் ஒரே ஒரு போட்டோ… ரசிகனாக மாறி குழந்தைபோல சச்சினுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சூர்யா

நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து பல படங்களில் தொடர்ச்சியாக சூர்யா நடித்து வந்தார்.இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்ததே தவிர முக்கிய நடிகர் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை.அதற்காக போராடிக்கொண்டிருக்கும் பொழுதுதான் இயக்குனர் பாலாவின் நந்தா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.தனது நடிப்பு திறமையை மொத்தமாக காண்பித்த நடிகர் சூர்யாவிற்கு இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக அமைந்தது.இந்த படத்தின் மூலம் சூர்யா முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.

Advertisement

தற்போது பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் பாலா உடன் வணங்கான் படத்தில் இணைந்துள்ளார்.கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடித்துள்ளார்.அண்மையில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது அப்படத்தில் இருந்து விலகி விட்டார்.மேலும் சிறுத்தை சிவா நடிப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.இப்படம் உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக உள்ளது.பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது

Advertisement

இந்நிலையில் நடிகர் சூர்யா மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினை நேரில் சந்தித்துள்ளார்,சச்சின் என்றால் யாருக்கு தான் பிடிக்காது சச்சினின் தீவிர ரசிகர் ஆன சூர்யா அவரை பார்த்த உடனே முழு ரசிகனாக மாறி அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் பெருமளவு வைரலாகி வருகிறது,இதனை பார்த்த சூர்யா ரசிகர்கள் என்ன சூர்யா குழந்தைபோல மாறிட்டாரே சச்சினை பார்த்த உடன் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in