The Indian Times

சுற்றுலா சென்ற பிக் பாஸ் 6 போட்டியாளர்களின் புகைப்படங்கள் இதோ

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.

தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.

இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல்தொடங்கி முடிவடைந்துள்ளது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் அசீம் பிக் பாஸ் கோப்பையை தட்டி சென்றார். தற்போது விஜய் தொலைக்காட்சி கலந்துகொண்ட போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

தற்போது இந்த நிகழ்ச்சிக்கு பிறகும் விஜே மகேஸ்வரி,ஏடிகே ,ரட்சிதா மற்றும் ஷிவின் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் இவர்கள் தற்போது அனைவரும் சுற்றுலா சென்றுள்ளனர்,இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்,இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in