The Indian Times

மருமகளுக்கு வளைகாப்பு நடத்திய பாக்கியலட்சுமி நடிகை கம்பம் மீனா புகைப்படங்கள் இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த சீரியலில் கதாநாயகி வீட்டில் வேலை செய்பவராக நடித்து வருபவர் தான் கம்பம் மீனா செல்லமுத்து.நாடகத்தில் வீடு வேலைக்காரி என்பதால் அதற்கு தகுந்த கெட்டப்பில் இருப்பார்.இவர் செய்யும் நகைச்சுவைகள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது.

Advertisement

இந்த நாடகத்தின் மூலம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளார் கம்பம் மீனா.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் கம்பம் மீனா அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது இவர் தனது மருமகளுக்கு வளைகாப்பை கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in