The Indian Times

டேய் யார்ரா நீ? நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் கோபி மற்றும் பழனிசாமி… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார்.  வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.மேலும் தற்போது கோபியும் ராதிகாவும் பாக்கியா வீட்டில் தங்கி வருகின்றனர்.

இந்த வார புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,இதில் பழனிச்சாமி பாக்கியா வீட்டிற்கு வந்து அங்குள்ளவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கோபி வீட்டிற்குள் வரவே,அவர் யார் என தெரியாமல் பழனிச்சாமி தடுத்து நிறுத்தி யார் நீ வீட்டிற்குள் எங்களை கேட்காமல் போற சேல்ஸ் மேனா எனக்கேட்டு சண்டையிடுகிறார்,ஆனால் கோபி அதை பற்றி கண்டுகொள்ளாமல் சிரித்துக்கொண்டே தனது அறைக்கு செல்கிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in