The Indian Times

மாமியாக வந்து மரண ஆட்டம் போட்ட BIGG BOSS தாமரை | BIGG BOSS JODIGAL SEASON 2

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் அடித்து சென்றனர்.தற்போது சீசன் 2 நிகழ்ச்சியை மே 8 முதல் ஒளிபரப்பு செய்ய உள்ளது விஜய் டிவி.தற்போது இதற்கான ப்ரோமோ வீடியோவை அண்மையில் வெளியிட்டது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர். அதன்படி போட்டியாளர்களாக, வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் அமீர் மற்றும் பாவனி பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியில் தாமரை அவரது கணவருடன் ஆடி வருகிறார்.நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே நடனத்தில் அசத்தி வருகின்றனர்.ரம்யாகிருஷ்ணனே இவர்கள் நடனத்தினை பாராட்டியுள்ளார்

தற்போது இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.இந்த வார நிகழ்ச்சியில் பாலக்காடு பக்கத்திலே என்ற பாடலுக்கு தாமரையும் அவரது கணவரும் மிரட்டல் ஆட்டம் போட்டு நடுவர்களையும் போட்டியாளர்களையும் அசர வைத்துள்ளனர்.நடிகை ரம்யா கிருஷ்ணன் தாமரை என்ன பயங்கரமாக வெட்கம்லாம் படுறீங்க என கேலி செய்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வார நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை இந்த ப்ரோமோ அதிகரித்துள்ளது என்றே கூறலாம்

Embed video credits : VIJAY TELEVISION 

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in