The Indian Times

ரம்யாகிருஷ்ணன் போல் வேடமணிந்து ஆடி அசத்திய BIGG BOSS அபிஷேக்

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ். நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை புதியதாக நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது நடன திறமைகளை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றனர்.இந்த பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் மிரட்டல் நடனம் ஆடி டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் ஆகிய இருவரும் வென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் பலத்த வரவேற்பினை அளித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் நாடியா ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் அமீர் மற்றும் பாவனி மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.இவர்களுக்குள் இப்படி ஒரு நடன திறமையா என கண்டு ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு நடனம் ஆடி வருகின்றனர்.நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்தில் இருந்தே நடுவர்களை நடத்தினால் ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.

இந்த வார நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த வாரம் போட்டியாளர்கள் ஆண்கள் பெண்களாகவும்,பெண்கள் ஆண்களாகவும் மாறி நடனமாட வேண்டும்,இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் அபிஷேக் ரம்யா கிருஷ்ணன் போல் வேடமணிந்து வந்து நடனம் ஆடி அசத்தியுள்ளார்.மேலும் இவருடன் இவரது அம்மாவும் அக்காவும் சேர்ந்து இணைந்து நடனமாடியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in