The Indian Times

மன்சூர் அலிகான் போல வந்து நடனமாடி அசத்திய BIGG BOSS சுஜா வருணே

பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு மக்களுக்கு அறிமுகமாகியவர் சுஜா வருணே.இவர் முதன் முதலில் பிளஸ் 2 என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.அதன்பின் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.இதுவரை இவருக்கு தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரம் மட்டும் தான் கிடைத்து வந்தது.இவருக்கான சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக அறிமுகமாகினார்.இதில் கலந்துகொண்டு தனது சிறப்பான விளையாட்டை மக்களிடம் காட்டி நல்ல வரவேற்பை பெற்றார்.இவருக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் போன்ற சினிமாக்களிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் துணை கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கவர்ச்சி பாடலுக்கும் சினிமாவில் நடனமாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சுஜா தனது கணவருடன் சேர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி வருகிறார்.தங்களது முடிந்த அளவு உழைப்பினை போட்டு நடனத்தில் வெளுத்து வாங்கி வருகின்றனர்.இந்த வார நிகழ்ச்சியில் சுஜா வருணே ஆணாகவும்,அவரது கணவர் பெண்ணாகவும் வேடமணிந்து நடனமாடியுள்ளனர் அதன்படி சுஜா மன்சூர் அலிகான் போல வேடமணிந்து சக்கு சக்கு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.இவர்கள் நடனத்தினை பார்த்த ரம்யாகிருஷ்ணன் இவர்களை வெகுவாக பாராட்டியுள்ளார்.மேலும் ப்ரோமோவை பார்த்த இந்நிகழ்ச்சி ரசிகர்களும் இருவரின் நடனத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்

Embed video credits : Vijay Television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in