The Indian Times

நான் LEO வில் விஜய் சார் பொண்ணா நடிக்கிறேனா? உண்மையை உளறிய ஜனனி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜனனி.ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்ட ஜனனி அங்குள்ள பிரபல சேனலில் தொகுப்பாளராகபணியாற்றி வந்தவர்.இவருக்கு லாஸ்லியா போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவே உடனே ஓகே சொல்லி நிகழ்ச்சியில் களம் இறங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஜனனி தனது முழு விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து,பொம்மை டாஸ்க்,பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.அந்தளவுக்கு ஜனனிக்கு ரசிகர்கள் படை உள்ளது.இறுதி வரை வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேறினார்.இது ஜனனியின் தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஜனனி வீட்டில் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது,தற்போது ஜனனி தளபதி விஜயின் 67வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அண்மையில் ஜனனி கலந்துகொண்ட நேர்காணலில் நீங்க லியோ படத்தில் விஜய் சார் பொண்ணா நடிக்கிறீங்களாமே என கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த ஜனனி அதை பற்றி நான் கூறக்கூடாது கம்பெனி ரகசியம் என கூறி படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளதை உளறியுள்ளார்.இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் இணையத்தில் பெருமளவு ஷேர் செய்து வருகின்றனர்.

Embed video credits : BEHINDWOODS TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in