The Indian Times

மீசை தாடி நரைத்து வயதான தோற்றத்திற்கு மாறிய நடிகர் ஜெயம் ரவி… அதிர்ச்சியாகிய ரசிகர்கள்

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆக மாறியுள்ளார் ஜெயம் ரவி .முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து மக்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

இவர் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக சினிமாவில் அமைந்தது.ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் பிரித்து மேய்ந்திருப்பார்.ஹீரோ கதாபாத்திரம் மட்டுமில்லை வில்லன் கதாபாத்திரமும் கட்சிதமாக வரும் என பகவான் கதாபாத்திரத்தின் மூலம் தெரிவித்தார்.இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் பிரம்மாண்டமாக வெளியாகியது,இதனை தொடர்ந்து இந்த ஆண்டு கோடையில் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது.

Advertisement

தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.புகைப்படத்தில் கட்டையாக வெட்டிய தலைமுடி நரைத்த மீசை தாடியில் வயதான தோற்றத்தில் உள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த லுக்கில் இவரை பார்க்கும் பொழுது ரவுடியாக அடுத்தப்படத்தில் நடிக்கிறார் எனவும் இது அடுத்தப்படத்தின் கெட்டப் எனவும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in