The Indian Times

சிங்கம் போல விமான நிலையத்தில் நடந்து வந்த தளபதி விஜய்… மனுஷனை பார்த்தாலே எனெர்ஜி வந்துடுதே நமக்கும்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் நூறு கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவருக்கு அண்மையில் வாரிசு படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது மேலும் 11 நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.இப்படத்தினை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்க உள்ளார்.லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் வேளைகளில் பயங்கர பிசியாக உள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க உள்ளது, இப்படத்தில் நடிகர் அர்ஜுன், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளனர்.கதாநாயகியாக த்ரிஷா நடிக்க உள்ளார்

Advertisement

இப்படம் காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகிறது.படக்குழு காஷ்மீரில் கடும் குளிரில் தங்கி இருந்து படத்தினை எடுத்து வருகிறது.இந்நிலையில் படப்பிடிப்பு முடித்துக்கொண்டு தளபதி விஜய் காஷ்மீரில் இருந்து சென்னைக்கு திரும்பியுள்ளார்.சென்னை விமான நிலையத்திற்கு அவர் வந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது,ரசிகர்கள் தளபதி விஜயின் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். வீடியோவில் தளபதி விஜய் எந்தவொரு அலப்பரையும் இன்றி அமைதியாக நடந்து வருவதை காணமுடிகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in