The Indian Times

நிகழ்ச்சியில் கத்தி கதறி அழுது கூப்பாடு போட்ட தாமரை | BIGGBOSS JODIGAL FINALE PROMO

விஜய் தொலைக்காட்சி ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை மக்களுக்கு நிரூபித்தனர்.அதன்படி முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் வென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக, வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் தாமரை அவரது கணவர் சாரதி என பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டையை கிளம்பினர்.இதில் பலர் எலிமினேட் ஆகி வெளியே சென்ற நிலையில் தற்போது இருக்கும் சில ஜோடிகள் மட்டும் இறுதி கட்டத்தினை எட்டியுள்ளனர்

Advertisement

மும்முரமாக நடைபெற்று வந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது.இறுதி போட்டி நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோவில் தாமரை கத்தி கதறி கூப்பாடு போட்டுள்ளார்,மேலும் அழுது கொண்டே எனக்கு படிப்பை பற்றி ஒன்னும் தெரியாது 10 பிள்ளைகளையாவது படிக்க வைக்க வேண்டும் என்பதே என் லட்சியம் என தெரிவித்துள்ளார் .இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தாமரையை கடுமையாக விமர்சனம் செய்தும் கேலி செய்தும் வருகின்றனர்.

Embed video credits: VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in