The Indian Times

வசூல் வெள்ளத்தில் ஊர்ந்து செல்லும் கோப்ரா…முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சினிமாவில் நடிக்க வேண்டும் என பெரும் கனவுடன் வாய்ப்பு தேட தொடங்கியவர் விக்ரம்.இவர் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலனாய் காதல் கண்மணி என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இப்படத்தின் மூலம் 1990ஆம் ஆண்டு சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார் விக்ரம்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்கள் நடித்தும் இவருக்கான வரவேற்பு என்பது எந்த படத்திலும் கிடைக்கவில்லை.1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது படத்தில் விக்ரம் நடித்தார்.இப்படத்தில் அவருடைய மொத்த உழைப்பையும் போட்டு தமிழ் சினிமாவையே அலற வைத்தார்.இப்படம் மாபெரும் வெற்றி கண்டது.

Advertisement

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோப்ரா.இப்படத்தினை செவென் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக கேஜிஎப் பட கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ளது.3 வருடங்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் விக்ரம் படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் படத்தினை கண்டு களித்து வருகின்றனர்.படம் விக்ரம் ரசிகர்களை தாண்டி பலரிடமும் நெகட்டிவ் விமர்சனங்களை தான் பெற்று வந்துள்ளது.

Advertisement

பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றும் தமிழகத்தில் முதல் நாளில் கோப்ரா சுமார் 10கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.3மணிநேரம் 3 நிமிடங்கள் அளவுக்கு வெளியாகிய இப்படத்தின் நீளத்தினை தற்போது படக்குழு குறைத்துள்ளது.நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றும் முதல்நாள் இத்தகைய வசூல் செய்துள்ளது அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.மேலும் வார இறுதி நாட்களில் இன்னும் அதிகமாக வசூல் படைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in